Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலுக்கு படப்பிடிப்பில் விபத்து…. திடீரென மருத்துவமனையில் அனுமதி….!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். தற்போது  வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிக்கும் லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் 100 ரவுடிகள் சேர்ந்து விஷாலை தாக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவருக்கு நிஜமாகவே காலில் பலத்த அடிபட்டது. இதை அடுத்து அவர் கீழே விழுந்து துடிதுடித்தார்.அவரால் மீண்டும் எழுந்து நிற்க முடியாத நிலையில் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.தற்போது அவர் நலமுடன் இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.இதனால் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று போனது.

Categories

Tech |