தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘தொரட்டி’ என்ற படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு, கொரோனா தொற்று காரணமாக மரணம் அடைந்தார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணிக்கு உயிரிழந்தார். கொரோனா தொற்றால் தொடர்ந்து திரைப்பிரபலங்கள் தொடர்ந்து மறைந்து வரும் நிலையில் மற்றொரு தமிழ் நடிகர் உயிரிழந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories