பிரபல தொகுப்பாளரும் நடிகருமான ஆர்.ஜே விக்னேஷ் காந்துக்கு திருமணம் முடிந்தது. தொகுப்பாளராக பயணத்தை தொடங்கிய விக்னேஷ், மீசைய முறுக்கு மற்றும் தேவ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமன்றி பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் மூலமும் ரசிகர்களிடம் பிரபலமானவர்.
இவருக்கும் ராசாத்தி என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஞான சம்பந்தன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் புதுமண தம்பதிகளுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.