நேற்று நடிகர் கவுதம் கார்த்திக்கின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மற்றும் பல நடிகர்கள் நடிகைகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில், நடிகை மஞ்சிமா மோகன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மை “my favorite human” என குறிப்பிட்டு காதல் குறியீட்டை பயன்படுத்த, அதற்கு கவுதமும் நன்றி “MY favorite human” என கூறி காதல் குறியீட்டை பயன்படுத்தினார்.
இருவரும் மாறி மாறி காதல் குறியீட்டை பயன்படுத்தி, காதலை உறுதி செய்துள்ளனர். இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.