தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இழந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி திவ்யா வெளியிட்டுள்ள பதிவில், “என்னப்பா சத்யராஜ் என் உயிர் தோழன். என் அரசியல் பாதையில் என்னுடன் கைகோர்த்து நிற்பார். ஆனால் என் சொந்த வளர்ச்சிக்காக ஒருபோதும் அப்பாவின் புகழை உபயோகிக்க மாட்டேன்” என்று அவர் கூறியுள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திவ்யா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.