அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அஞ்சலி. தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய அழகான நடிப்பால் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் அஞ்சலி தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் காதலில் விழவில்லை என்று பொய் சொல்லமாட்டேன். எந்தப் பெண்ணாக இருந்தாலும் காதல் தோல்வி அடைந்தால் அந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியாது. பெண்களின் இதயம் கைல் இல்லை. ஆனால் அம்மா கொடுத்த தைரியத்தில் வெளியே வந்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.