நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, ஐயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் நானும் ரவுடிதான். இந்த படத்தின் மூலம்தான் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் காதலித்து வருகின்றனர்.
நயன்தாராவுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நயன்தாரா உடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ்வன். அந்த புகைப்படத்தில் இருவரின் முகமும் தெரியவில்லை. நயன்தாராவின் கை தான் தெரிகிறது. புகைப்படத்தை வெளியிட்டு கூறியிருப்பதாவது: விரலோடு உயிர் கூட கோர்த்து என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற போகிறது என்று பதிவிட்டு வருகின்றனர். இது மட்டுமில்லாமல் நயன்தாரா மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.