பிரபல தமிழ் நடிகை பூர்ணா தனக்கு சானித் ஆசிப் அலி என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சானித் ஆசிப் அலி என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஜிபிஎஸ் குரூப் ஆப் கம்பெனியில் சிஇஓவாக உள்ளார். திருமண தேதி விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு அருள்நிதி நடித்த தகராறு, சசிகுமார் கொடிவீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தலைவி படத்தில் கங்கனா ரணாவத் தோழியாக நடித்திருப்பார் . இது மட்டுமல்லாமல் பல படங்களில் கேரக்டர் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories