தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் பூஜாவுக்கு கை கொடுக்காததால் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கு தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது பல மொழிகளில் நடிக்கும் பூஜா, தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பூஜா ஹெக்டேவுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பின் போது அவர் தவறி பட விழுந்துள்ளார். இதனால் அவருடைய இடது காலில் தசைநார் கிழிந்துள்ளது. பூஜா ஹெக்டே தற்போது மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் ஓய்வெடுத்து வருகிறார்.