தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். இவர் தொடர்ந்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். 2014 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய்யும் அமலாபாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனையடுத்து படங்களில் பிசியாக அமலாபால் நடித்து வருகிறார்.
இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, தன்னுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிடுவேன் என மிரட்டுவதாக அமலா பால் அளித்த புகாரின் அடிப்படையில் பவ்நிந்தர் சிங் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பவ்நிந்தர் சிங் ஜாமின் கோரி வானூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, திடீர் திருப்பமாக அமலா பாலுக்கும், தனக்கும் திருமணம் நடந்ததற்கான பதிவுத் சான்றிதழை அவர் சமர்பித்ததை அடுத்து, நீதிபதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.