பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் திருச்சியில் இன்று காலமானார். அவர் உடல் நலக் கோளாறு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஜெயசித்ரா ‘குறத்தி மகன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகி, குணச்சித்திர நடிகை மற்றும் சீரியல் நடிகை என பல பரிமாணங்களில் தடம் பதித்தவர்.
அவருக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் கணவர் மறைவு அவரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.