Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் பாடகிக்கு திடீர் விபத்து… சோகம்…!!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாடகி நித்யஸ்ரீ நடித்துக் கொண்டிருந்த போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளார்.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த மிகப்பெரிய நிகழ்ச்சி. நேற்று பிறந்த குழந்தை முதல் இறக்கப்போகும் முதியோர்கள் வரை அனைவரும் சூப்பர் சிங்கரை கண்டு மகிழ்வார்கள். அந்த பிரபல நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நித்யஸ்ரீ. அவர் கடந்த வருடம் கேரளாவில் வெள்ளம் வந்தபோது தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கேரள வெள்ளத்திற்கு பணம் திரட்டி ரூ.1.5 லட்சத்தை மலையாள கிளப்பின் உரிமையாளரிடம் கொடுத்தார். அவரின் இந்த குணம் பாராட்டுக்குரியது. அவர் தற்போது வெளிநாடுகளில் பாடி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் நித்தியஸ்ரீ ஆல்பம் ஒன்றின் ஷூட்டிங்கில் பங்கேற்ற போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. ஆடிக்கொண்டிருக்கும் போது நிலை தடுமாறி விழுந்த அவருக்கு தலையில் அடிபட்டது. அதன் பிறகு அவர் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. மெல்ல நலம் பெற்று வருவதாகவும் விரைவில் பூரண நலம் அடைவேன் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |