நெல்லையில் பொதுமக்கள் மெழுகுவர்த்தியை ஏந்தி நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழ் திரையுலக நடிகரான காமெடிக்கு பெயர் பெற்ற விவேக்கை தெரியாத நபர்களே இருக்க முடியாது. மேலும் இவர் பல வகையான மரக்கன்றுகளை நட்டு சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் உதவியவர். இந்த நிலையில் இவர் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தத்திலுள்ளனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் ராம் தியேட்டர் வளாகத்தில் வைத்து முகநூல் நண்பர்களின் சார்பாக விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதாவது அலங்கரிக்கப்பட்ட விவேக்கினுடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவி மரியாதை செலுத்தியும் உள்ளார்கள். மேலும் இதனையடுத்து அனைவரும் கண்ணீர் மல்க மெழுகுவர்த்தியை ஏந்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.