பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் கத்ரகடா முராரி (வயது 78) சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவர் யுவ சித்ரா ஆர்ட்ஸ் பேனரில் பாலகிருஷ்ணாவின் சீதாராம கல்யாணம், நரி நரி நடுமா முராரி, நாகர்ஜூனாவின் ஜானகி ராமுடு, வெங்கடேஷின் ஸ்ரீனிவாச கல்யாணம் உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார். 1944-ல் விஜயவாடாவில் பிறந்த இவர் சினிமா துறையில் நுழைந்த பிறகு சென்னைகில் குடியேறினார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories