பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் புதிய படத்தில் நடிகை வரலட்சுமி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ரூலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நேற்று நந்தமூரி பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது . பிரபல தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கும் இந்த படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை வரலட்சுமி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வரலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறாரா? அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? என்பது விரைவில் தெரியவரும். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.