Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல தெலுங்கு நடிகரின் தந்தைக்கு ஜோடியாகும் இலியானா… வெளியான புதிய தகவல்…!!!

நடிகை இலியானா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் நடிகை சமந்தாவின் கணவரும், நடிகருமான நாகசைத்தன்யாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாகார்ஜுனா நடிப்பில் கோஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. பிரவீன் சட்டாரு இயக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

నాగార్జున కోసం ఇలియానా వేయిటింగ్.. ! | The News Qube

இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி பிரபல நடிகை இலியானாவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு பதிலாக இலியானா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |