பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுடன் விஜய் மற்றும் திரிஷா இருக்கும் பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது. மேலும் அவ்வப்போது நடிகர் விஜயின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுடன் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரும் இருக்கும் பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது. திருப்பாச்சி படத்தின் படப்பிடிப்பின் போது இந்த புகைப்படம் எடுக்கப் பட்டதாக தெரிகிறது .