‘பிரம்மன்’, ‘மாயவன்’ படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் லாவண்யா திரிபாதி. இவர் பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ்வை காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. வருண் தேஜ் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாகபாபுவின் மகன்.
இது குறித்து கூறிய லாவண்யா, ”நானும் வருண் தேஜும் காதலிப்பதாகவும் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வெளியான தகவலில் உண்மை இல்லை. அது முற்றிலும் வதந்தி. வருண் தேஜுடன் இணைந்து 2 படங்களில் நான் நடித்துள்ளதால் எங்களுக்குள் காதல் என்ற வதந்தியை பரப்பி உள்ளனர். யாரையும் நான் காதலிக்கவில்லை” என்றார்.