பிரபல நடிகரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த கிருஷ்ணராஜூ 183 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவர் மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் 83 வயதாகும் கிருஷ்ணராஜூ தற்போது உடல்நல குறைவின் காரணமாக காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய twitter பக்கத்தில் கிருஷ்ணராஜுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் பலம்பெரும் நடிகர் கிருஷ்ண ராஜுவின் இரங்கல் செய்தியை கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். திரைப்படத்துறையில் அவருடைய அறிவுக்கு உரிமை வருங்கால இளைய தலைமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும். அவர் சமூக சேவையிலும் முன்னோடியாக திகழ்ந்ததோடு அரசியலிலும் தடம் பதித்துள்ளார். அவருடைய குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.