Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொகுப்பாளினி டிடி-க்கு விரைவில் டும் டும் டும்?….. மாப்பிள்ளை யார் தெரியுமா….? குவியும் வாழ்த்து….!!!!

பிரபல விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் தான் விஜய் டிவியில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பொதுவாக தொகுப்பானினி என்று சொன்னவுடன் பலரது நினைவிலும் முதலில் டிடி தான் வருவார். அந்த அளவுக்கு டிடிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவருக்கு சமீபத்தில் காலில் அடிபட்டதால் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்த நிலையில், நயன்தாராவை கனெக்ட் படத்தின் ப்ரோமோஷன்காக அண்மையில் பேட்டி எடுத்தார்.

அதன் பிறகு டிடிக்கு ஸ்ரீகாந்த் என்பவருடன் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் டிடிக்கு தற்போது இரண்டாவதாக திருமணம் நடைபெறப் போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டிடி மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை தான் இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல்கள் ‌ தீயாக பரவி வருகிறது. இதனால் பலரும் டிடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Categories

Tech |