Categories
தேசிய செய்திகள்

“பிரபல தொழிலதிபரின் மாற்றுத்திறனாளி மகன்” திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் பணத்துடன் ஓட்டம்…. பெரும் பரபரப்பு….!!!

திருமணம் முடிந்த 3 நாட்களில் புதுப்பெண் பணத்துடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள மாலாடு பகுதியில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 28 வயதுடைய மாற்றுத்திறனாளி மகன் இருக்கிறார். இந்நிலையில் தொழில் அதிபர் தன்னுடைய மகனுக்காக பெண் தேடியுள்ளார். ஆனால் தொழிலதிபரின்  மகன் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் பெண் கிடைக்கவில்லை. இந்நிலையில் கமலேஷ் என்ற தரகர் தொழிலதிபரிடம்  ஆஷா என்ற பெண் உங்களுடைய மகனை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய தொழிலதிபரும் ஆஷாவை தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்துவைக்க சம்மதித்துள்ளார். அதன்பிறகு ஆஷா தொழிலதிபரிடம் தான் ஒரு ஆதரவற்றவர் என்றும், தனக்கு மனிஷா என்ற அத்தை மட்டும் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து ஆஷாவுக்கும் தொழிலதிபரின் மகனுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

அதன்பிறகு 3 நாட்கள் கழித்து ஆஷா தனக்கு சீதனமாக வந்த தங்க நகைகளை அணிந்து கொண்டு மார்க்கெட்டுக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஆஷா வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் தொழிலதிபர் ஆஷாவுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ஆஷா தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், பணத்திற்கு ஆசைப்பட்டு உங்களுடைய மகனை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் காவல்துறையில் ஆஷா, மனிஷா மற்றும் கமலேஷ் ஆகிய 3 பேர் மீதும் 4 லட்ச ரூபாய்  மோசடி செய்ததாக கூறி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோசடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |