Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடன இயக்குனருடன் தனுஷ்… வைரலாகும் ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பு புகைப்படம்…!!!

பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டருடன் தனுஷ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி வருகிறார். ‌இந்த படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .

Again Jani master choreographed song in Dhanush’s

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பின் போது தனுஷ், ஜானி மாஸ்டர் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |