நடிகர் சோனுசூட் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட, பஞ்சாப் திரை படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார். 2009ல் சிறந்த வில்லனுக்கான நந்தி விருது, பிலிம்பேர் விருது ஆகியவற்றையும், 2010 ல் அப்சரா, ஐஐஎப்ஏ விருது ஆகியவற்றையும் பெற்றார். இவருக்கு தபாங், அருந்ததி போன்ற திரைப்படங்கள் புகழை தந்தன. இவர் கொரோனா காலகட்டத்தில் பலருக்கும் உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனாவால் வாடும் மக்கள் ஆக்சிஜன் உள்ளிட்ட உதவிகள் கேட்டு நடிகர் சோனுசூட் செல்போனுக்கு அழைப்பு விடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். “நான் முடிந்த வரை உதவி வருகிறேன். தயவுசெய்து வீட்டில் இருங்கள். முகக்கவசம் அணியுங்கள். உதவி கேட்பவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறோம். தாமதமாகவோ, தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டால் மன்னியுங்கள்” என்று கூறியுள்ளார்.