Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல நடிகரின் திருமணத்தில் பங்கேற்ற விஜய்”…. வெளியான அன்சீன் வீடியோ வைரல்…!!!!!

நடிகர் கார்த்தியின் திருமணத்தின்போது விஜய் பங்கேற்ற வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது.

இத்திரைப்படத்தையடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இவர்கள் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது. இந்த நிலையில் அண்மை காலமாக விஜய்யை பொது இடங்களில் பார்ப்பது அரிதான விஷயமாக மாறி உள்ளது.

இதனால் விஜய் பொது இடங்களில் அல்லது நிகழ்ச்சிகளில் இருக்கும் பழைய வீடியோ தற்பொழுது வெளியானால் அது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் கார்த்தியின் திருமணத்தின் போது நடிகர் விஜய் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவானது சுமார் பத்து வருடங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |