பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை காவியா பிரபல நடிகரின் படத்தில் நடிக்கவுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் மறைவுக்கு பின் அந்தக் கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார் . இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர்.
தற்போது இவர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அதிக அளவு பிரபலமடைந்துள்ளார். இந்நிலையில் நடிகை காவியாவுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் காவியா இணைந்துள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.