ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம் நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்திற்கான ஓடிடி உரிமையை கைப்பற்றி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்தவகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான “சுல்தான்” திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக ஒரு நல்ல படமாக பேசப்பட்டு வந்தது. இதனை அடுத்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும், முத்தையா இயக்கும் விருமன், பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் உள்ளிட்ட படங்களில் கார்த்தி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் சர்தார் திரைப்படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் இருவரும் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். இப்படம் ஜீவி பிரகாஷ் இசையமைப்பில் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம் இதன் ஓடிடி உரிமையை கைப்பற்றி உள்ளது. இந்த நிறுவனம் தெலுங்கு திரைப்படங்கள், தொடர்களை மட்டுமே வெளியிட்டு கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது தமிழிலும் தங்கள் கவனத்தை செலுத்தி உள்ளது. மேலும் இந்த படத்திற்காக பெரும் தொகையை செலவிட்டு இந்த நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.