Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிம்பு… வெளியான சூப்பர் புகைப்படங்கள்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

நடிகர் சிம்பு நடிகர் ஜெய்யின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் படு வேகமாக திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். ஒரு காலத்தில் சிம்பு உடல் எடை கூடியதால் படங்களில் நடிக்காமல் சில பிரச்சனைகளை சந்தித்து வந்தார். இதையடுத்து இவர் ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். மேலும் இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது .

தற்போது இவர் மாநாடு, பத்து தல என அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நடிகர் ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் சிம்பு கலந்து கொண்டுள்ளார். இருவரும் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகர் ஜெய்க்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |