Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகரின் மகன்…. திடீர் மரணம்…. கண்ணீருடன் முகநூல் பதிவு…!!

பிரபல நடிகரின் மகன் தற்போது மரணமடைந்துள்ள  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதன் பரவலை தடுக்க கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பல உயிர்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஹிந்தி காமெடி நிகழ்ச்சியில் இருந்து சினிமாவுக்கு வந்த பிரபல நடிகரான ராஜீவ் நிகமின் மகன் தற்போது மரணமடைந்துள்ளார். நேற்றைய தினம் ராஜீவ்க்கு பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், தற்போது அவருடைய மகன் இறந்துள்ள செய்தியை தன்னுடைய முகநூல் பதிவில் உருக்கமாக வெளியிட்டுள்ளார்.

ராஜீவ் தன்னுடைய முகநூல் பதிவில், “என்ன ஒரு சர்பிரைஸ். எனது பிறந்தநாள் கேக்கை கூட சாப்பிடாமல், என் மகன் இன்று என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இது போன்ற பரிசை வேறு யாராவது தன தந்தைக்கு கொடுக்க முடியுமா” என்று கண்ணீருடன் உருக்கமாக கூறியுள்ளார்.

Categories

Tech |