பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சல்மான்கான் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் நேற்று மும்பையில் புதிதாக பணியமர்ந்துள்ள போலீஸ் கமிஷனர் பன்சால்கரை சந்தித்தார். அப்போது கமிஷனரிடம் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமை வேண்டும் என கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகர் சித்து முஸ்வாலா கடந்த மே மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இவருடைய கொலைக்கு பின்னால் பஞ்சாப் மாநிலத்தின் பிரபல தாதாவான லாரன்ஸ் பீஸ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடிகர் சல்மான் கான் மற்றும் அவருடைய தந்தை சலீம்கானுக்கும் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் சித்து முஸ்வாலாவுக்கு ஏற்பட்ட அதே கதிதான் உங்களுக்கும் நேரும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணமாகத்தான் நடிகர் சல்மான் கான் கமிஷனரிடம் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.