நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப் பிரபல நடிகருடன் இணைந்து படத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார் .
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதலில் இந்த சீரியலில் பிரபல நடிகை விஜயலட்சுமி கதாநாயகியாக நடித்து வந்தார். இதன்பின் அவர் விலகியதால் அவருக்கு பதிலாக நடிகை வித்யா பிரதீப் கதாநாயகியாக நடித்து வந்தார்.
இந்நிலையில் நடிகை வித்யா பிரதீப் பிரபல நடிகருடன் இணைந்து படத்தில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்கும் படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை வித்யா பிரதீப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.