புஷ்பா படத்தின் பாடலுக்காக நடன பயிற்சியை தொடங்கியுள்ளதாக ராஷ்மிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘புஷ்பா’ திரைப்படம் உருவாகி வருகிறது. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். புஷ்பா திரைப்படம் இரு பாகங்களாக உருவாகி வருகிறது.
இதில் முதல் பாகம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி செம ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புஷ்பா படத்தின் பாடலுக்காக நடன பயிற்சியை தொடங்கியுள்ளதாக ராஷ்மிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.