Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல நடிகரை சில நிமிடங்களிலேயே பின் தொடர்ந்த ரசிகர்கள்”… வைரலாகும் வீடியோ…!!!!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்த திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கே எஸ் ரவிக்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் – பதான், நீயா ஜார்ஜ், கனிகா, மிருனாளினி, ஜான்விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கின்ற பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.

இதனை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் 61 படத்தில் நடித்த வருகின்றார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இந்த நிலையில் நடிகர் விக்ரம் சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்து இருக்கின்றார். மேலும் இவர் இணைந்த சில நிமிடங்களையே ரசிகர் பலர் இவரை பின்தொடர ஆரம்பித்து விட்டனர். அதுமட்டுமல்லாமல் இவர் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |