பிரபல நடிகர் அகில் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் அகில் அக்கினேனி தற்போது ஏஜென்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மம்முட்டி மற்றும் சாக்ஷி வைத்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்க, ஏகே என்டர்டைன்மெண்ட்ஸ் மற்றும் சுரேந்தர் டூ சினிமா இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஏஜென்ட் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் தமிழ் டீசரை நடிகர் சிவகார்த்திகேயனும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், மலையாளத்தில் மம்முட்டியும், தெலுங்கில் அகில் அக்கினேனியும் வெளியிட்டுள்ளனர். மேலும் தற்போது ஏஜென்ட் படத்தின் இந்தி டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.