நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. கொரோனாவால் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
தொற்று உறுதியானதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார்.