பிரபல நடிகர் குறித்த வதந்திகளுக்கு அவருடைய மனைவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நாசர். இவர் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை அப்படியே உள்வாங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். இதற்காகவே நடிகர் நாசருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில் நடிகர் நாசர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக சினிமாவில் இருந்து விலகுவதாகவும் செய்திகள் பரவியது.
இந்த செய்தி காட்டுத்தீ போல் இணையத்தில் வேகமாக பரவியது. ஆனால் இந்த தகவலில் தற்போது உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதாவது நடிகை நாசரின் மனைவி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பொய்யான செய்திகளை பரப்புவர் நீண்ட நாட்கள் வாழட்டும் என்றும், என்னுடைய கணவருக்கு நடிப்பு தான் எல்லாமே என்றும் பதிவிட்டுள்ளார். இதன் மூலமாக நடிகர் நாசர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்பது உறுதியாகயுள்ளது.