பிரபல நடிகர் ஜானி டெப் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் என்ற திரைப்படத்தின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் நடித்த ஜாக் ஸ்பாரோ என்ற கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் பிறந்த ஜானி டெப்பிற்கு அவருடைய தாய் மற்றும் தந்தை தான் உலகமாக இருந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஜானி டெப்பின் தாய் மற்றும் தந்தை இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஜானி டெப் ஆளானார். இருப்பினும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டார். இவர் தன்னுடைய 15 வயதில் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளை செய்து வந்தார்.
அங்கு சமயத்தில் கடந்த 2003-ம் ஆண்டு பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் என்ற திரைப்படத்திற்கான ஆடிஷன் நடைபெற்றது. இந்த ஆடிஷன் இல் கலந்துகொண்ட ஜானி டெப் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மற்ற நடிகர்களை போன்று இல்லாமல் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி திறமையாக பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு உலகத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற கின்னஸ் சாதனையும் படைத்தார். மேலும் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகர் திடீரென இறந்து விட்டதால் அவருடைய மகளின் படிப்பிற்கான மொத்த செலவையும் ஜானி டெப் ஏற்றுக்கொண்டார்.