பிரபல நடிகரின் திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் அஜித், இயக்குனர் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை படம் மாபெரும் வரவேற்பை பெற்றதால், இதே கூட்டணியில் வலிமை படம் உருவானது. இந்த வலிமை படம் வசூல் ரீதியாக சாதனை படைத்திருந்நறதாலும், ரசிகர்கள் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் நடிகர் அஜித், வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில் ஏகே 61 படம் தயாராகி வருகிறது.
இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து பிரபல நடிகர் கார்த்திக் நடிக்கும் சர்தார் படம் தீபாவளியன்று ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வரிசையில் தற்போது ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகும் இறைவன் திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இறைவன் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.