Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் எஸ்வி சேகருக்கு கொரோனா..!!

பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் எஸ்வி சேகர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஜெயராமுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, “கடந்த 2 நாட்களாகவே எனக்கு  உடல் நிலை பாதிப்பு இருந்துவந்துள்ளது . எனவே நான்  மருத்துவ பரிசோதனை செய்தேன். இதில் எனக்கு  கொரோனா தொற்று  இருப்பது கண்டறியப்பட்டது . இதன்காரணமாக நான்  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல,  நகைச்சுவை நடிகராக இருக்கும்  எஸ்.வி.சேகர் அவர்களுக்கு  கொரோனா தொற்று உறுதியானது . இதையடுத்து, இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள நிலையில்  டாக்டரின் அறிவுறுத்தலின்  படி அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார் .

Categories

Tech |