விஜய் பாபு என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பணிபுரிகிறார். ஆந்திரப் பிரதேசம், காளத்தியில் பிறந்த இவர் 80-களின் முற்பகுதியில் மிகவும் சுறுசுறுப்பாக திரைப்படங்களில் இயங்கிவந்தார். இவர் ஃபிரைடே பிலிம் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிரபலமான பல படங்களை தயாரித்துள்ளார். இவ்வாறு, இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஆவார். இந்நிலையில் இவர் மீது பலாத்கார வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து விஜய் பாபு தலைமறைவாகும் பொருட்டு, வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார். இதை அறிந்த போலீசார் அவரை பிடிக்க இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடியுள்ளனர். மேலும் இதற்கிடையே நடிகர் விஜய்பாபு, முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அப்போது அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, அவரை விசாரணை அதிகாரிகள் முன், ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து , 2-ஆம் தேதி வரை அவரை கைது செய்ய, தடை விதித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் விஜய்பாபு, இந்த வழக்கை வாபஸ் வாங்கினால், ரூ. 1 கோடி தருவதாக பேரம் பேசியுள்ளார் என சம்பந்தப்பட்ட நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றையும் வைத்துள்ளார். இதையடுத்து என்ன நடந்தாலும், இந்த வழக்கினை, வாபஸ் வாங்க மாட்டேன் என அப்பெண் கூறியதாகவும், அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜய் பாபுவின் மீது சம்பந்தப்பட்ட அப்பெண், முன் வைத்துள்ள புதிய குற்றச்சாட்டானது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.