தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான வலம் வரும் நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ‘ராதே ஷ்யாம்’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதோடு தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் ,ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ‘ராதே ஷ்யாம்’ படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்ற உறுப்பினரும் நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் ‘REDGIANT ‘ நிறுவனம் மூலம் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளதாகவும்,இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.