நடிகர் பிரசாந்த் இரண்டாவது முறையாக விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வந்த பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் சென்ற 2005ஆம் வருடம் க்ரஹலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பின் கருத்து வேறுபாடு காரணமாக 2008ஆம் வருடம் விவாகரத்து பெற்றார். இதனால் திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது தியாகராஜன் இயக்கிவரும் திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் 2-வது முறையாக திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.