Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் மர்ம முறையில் மரணம்… கிணற்றில் மிதந்த சடலம்… அதிர்ச்சி…!!!

பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் அவர் பிணமாக மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். அவரை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தநிலையில், அவரின் வீட்டில் அருகில் இருந்த கிணற்றில் அவர் பிணமாக மிதந்த கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் இங்கிலீஷ் மீடியம், காக்ஸி, அம்மினி பில்லா, மழமேகப்ரவுன், ரமணம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவரது மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது அவரை கொலை செய்து கிணற்றில் தூக்கி போட்டார்களா என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |