Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் ரமேஷ் அரவிந்த்தின் மகள் திருமணம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

பிரபல நடிகர் ரமேஷ் அர்விந்த்தின் மகள் நிஹாரிகாவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது ‌

தமிழ் ,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 140 படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ரமேஷ் அரவிந்த் . தமிழ் திரையுலகில் மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி, டூயட், கேளடி கண்மணி ,ரிதம், பஞ்சதந்திரம், ஜோடி ,சதிலீலாவதி, மும்பை எக்ஸ்பிரஸ், உத்தம வில்லன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இந்நிலையில் நடிகர் ரமேஷ் அரவிந்த் மகளும்  தயாரிப்பு மேலாளருமான நிஹாரிகாவின் திருமண கொண்டாட்ட விழா அவரது இல்லத்தில் ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது . நிஹாரிகா டிஜிட்டல் வடிவமைப்பாளர் அக்ஷய் என்பவரை மணந்துள்ளார் .

A week-long celebration, as Ramesh Aravind's daughter Niharika ties the  knot | Kannada Movie News - Times of India

இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர் . கொரோனா பரவல் காரணமாக இந்த திருமணத்தை பெரிய அளவில் நடத்த முடியவில்லை . அதை சரிசெய்ய வெவ்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கிய ஒருவார கொண்டாட்டத்திற்கு திட்டமிட்டதாக ரமேஷ் அரவிந்தின் மனைவி அர்ச்சனா தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ரமேஷ் ‘மணமக்களுக்கு உங்களது ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கிறோம்’ என பதிவிட்டுள்ளார் . தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது .

Categories

Tech |