பிரபல நடிகரின் படம் நேரடியாக ஓடிடியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படமும், மாமனிதன் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 19(1)(a) என்ற பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரித்துள்ள 19 (1)(a) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது படத்தை disney+ hotstar ஓடிடி தளத்தில் வெளியிடப் போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் ரிலீஸ் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
19(1)(a) Coming Soon On #DisneyPlusHotstarMultiplex#191A #DisneyPlusHotstarMultiplex #VijaySethupathi #NithyaMenen #IndrajithSukumaran #DisneyPlusHotstarMultiplex #DisneyPlusHotstar #DisneyPlusHotstarMalayalam pic.twitter.com/uLFiHq6cyF
— VijaySethupathi (@VijaySethuOffl) July 16, 2022