நடிகை மஞ்சிமா மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வதந்தியை கௌதம் கார்த்திக் உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்த கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இவர் கடல் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் அடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தேவராட்டம் திரைப்படத்தில் மஞ்சிமா மோகனுடன் இணைந்து நடித்திருந்தார். இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்தி பரவியது. கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றது.
கடந்த சனிக்கிழமை அன்று மஞ்சிமா மோகன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு கௌதம் கார்த்திக் வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, “எப்போதாவது நான் நன்றியுள்ளவனாக இருந்திருந்தால் என் வாழ்க்கையில் உங்களைப் போன்ற ஒரு அற்புதமான மற்றும் வலிமையான நபர் எனக்கு இருக்கிறார் என்பதே உண்மை. நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடனும் அனைவரின் ஆசீர்வாதத்துடனும் இருங்கள்” என்று கூறியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவர்கள் காதல் குறித்து பரவிய தகவல்கள் உண்மைதான் போல என்று கேட்டு வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.