தனுஷ் உடன் ராஞ்சனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்த சோனம் கபூர் 2018 ஆம் ஆண்டு இந்திய தொழிலதிபர் ஆனந்த் அஹாஜாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று அந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசவ காலத்தில் தனக்கு ஆதரவாக இருந்த நண்பர்கள், உறவினர்கள் மற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி என்று அவர் தெரிவித்திருந்தார். இவருக்கு திரை பிரபலங்கள் ரசிகர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Categories