பிரபல நடிகை கொரோனா பாசிட்டிவானதை சோகமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிகாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலிக்கிறார். அவ்வப்பொழுது அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. எப்போது கல்யாண அறிவிப்பை சொல்வீர்கள் ஸ்ருதிஹாசன்..? என நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் கொரோனா பாசிடிவாகியுள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவில் கூறியுள்ளதாவது, “அனைவருக்கும் வணக்கம். இது சந்தோஷமான அறிவிப்பு கிடையாது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கவனமாக பின்பற்றியும் தற்போது எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டுவரும் முயற்சியில் நான் உள்ளேன். நன்றி! கூடிய விரைவில் பார்க்கிறேன்” என இப்பதிவில் கூறியிருக்கின்றார்.
https://www.instagram.com/p/CaeBeEeNUFx/?utm_source=ig_web_button_share_sheet