இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் டெல்லி முழுவதும் சுடுகாடாக காட்சி அளித்து வருகிறது. இதனால் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடைய சகோதரி, பெற்றோருக்கும் தொற்று பாதித்த நிலையில், அவருடைய அப்பா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.