பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தனக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். தற்போது இவர் நடிகர் பிரபாஸ்-க்கு ஜோடியாக ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகின்றார். அதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் படப்பிடிப்பின் போது திடீரென அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதனால் சோர்வடைந்து அவரை உடனே மருத்துவமனைக்கு படக்குழுவினர் அழைத்துச் சென்றனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளித்த பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் வேண்டி வருகிறார்கள்.