Categories
சினிமா

பிரபல நடிகையின் தந்தை மரணம்…. “தந்தையை தோளில் சுமந்து இறுதி சடங்கு செய்த நடிகை”….!!!

பிரபல நடிகையின் தந்தை நேற்று காலமானார். ரவீனா டாண்டன் தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்தார்.

பாலிவுட் படங்களில் 1990-களிலிருந்து நடித்து வருபவர் நடிகை ரவீனா டாண்டன். இவர் பெரும்பாலும் இந்திப் படங்களிலேயே நடித்துள்ளார். மேலும் இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். தமிழ் படங்களில் அர்ஜூனின் சாது, கமல்ஹாசனின் ஆளவந்தான் உள்ளிட்டவற்றில் நடித்திருக்கிறார்.

இவருடைய தந்தைக்கு 87 வயதாகிறது. அவர் நேற்று உயிரிழந்துள்ளார். மும்பையில் உள்ள வீட்டில் இறுதிச்சடங்கு நடந்தது. இறுதிச் சடங்கில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். ரவீனா டாண்டன் தனது தந்தையின் உடலை சுமந்து அவரின் இறுதிச் சடங்கை செய்தார். இவரது தந்தை டாண்டன் அன்ஹோனி,நஸ்ரானா, ஜூட்டா கஹின் கா, மஜ்பூர், குத்தார், ஜிந்தகி பூஞ்சை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |